இறப்பிலும் இணை பிரியாத தம்பதிகள்..! சிறுமுகையில் கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் மரணம்

கோவை: கோவை மாவட்டம் சிறுமுகையில் கணவர் இறந்த துக்கம் தாளாமல் சில மணித்துளிகளில் மனைவியும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவை மாவட்டம் சிறுமுகையில் கணவர் இறந்த துக்கம் தாளாமல் சில மணித்துளிகளில் மனைவியும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு தண்ணீர் தடம் கருமாரியம்மன் கோவில் அருகில் வசித்து வந்தவர் பெள்ளாதி என்கிற ரங்கசாமி (86). இவருடைய மனைவி கண்ணம்மாள் (68) கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கண்ணம்மாள் புற்றுநோய் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக உடல் நலம் இல்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று காலை 9 மணி அளவில் ரங்கசாமி வீட்டுக்குள் செல்லும்போது, வாசல்படி நிலவு தட்டி விழுந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்தது. இதைப் பார்த்த அவருடைய மனைவி கண்ணம்மாள் ஓடிச்சென்று அவர் மீது விழுந்து கதறி அழுத போது மாரடைப்பால் அவருடைய உயிரும் அங்கேயே பிரிந்தது. ஒரே நேரத்தில் கணவன், மனைவி இருவரின் உயிரும் பிரிந்து, இறப்பிலும் இணைந்த தம்பதியை எண்ணி, உறவினர்களும் அப்பகுதி மக்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். இறப்பிலும் இணைபிரியாத தம்பதிகளுக்கு ஜோதிமணி, சின்னத்தாய், லட்சுமி என மூன்று மகள்களும், நாகராஜ், முருகேசன் என்ற 2 மகன்கள் என 5 பேர், பேரன் பேத்திகள், கொள்ளு பேரன், பேத்திகள் என பலர் உள்ளனர்.

கணவர் மீது அதிக பாசம் கொண்ட கண்ணம்மாள் அடுத்த நொடியே தானும் இறந்ததால், இறப்பிலும் இணைபிரியாத ஜோடியாக அந்த பகுதிகளில் பேசப்படுகிறது. இறப்பிலும் இணைபிரியாத இந்த தம்பதியினரின் மறைவை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பலரும், அவர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை மாலை இருவரது உடலும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...