மருத்துவர்களின் அலட்சியத்தால் மகள் உயிரிழப்பு; 8 மாதங்களுக்கு பின் திருப்பூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்..!

திருப்பூர்: எட்டு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை பணி நீக்கம் செய்யக்கோரி உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: எட்டு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை பணி நீக்கம் செய்யக்கோரி உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூரைச் சேர்ந்த அருணாதேவி(24) என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு ஏப்ரல் 13-ஆம் தேதி சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்த நிலையில், ஏப்ரல் 16ம் தேதி முதல் குழந்தைக்கு மஞ்சள் காமாலை என 8 நாட்கள் இங்குபேட்டரில் வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து, ஏப்ரல் 24ம் தேதி அருணாதேவிக்கு காய்ச்சல் ஏற்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அப்போது, மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தினால் அடுத்த நாள் காய்ச்சல் அதிக அளவு இருந்ததால் கோவை அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் அருணாதேவி உயிரிழந்தார்.



இந்நிலையில், தங்கள் மகளின் உயிரிழப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எட்டு மாதங்கள் கழித்து அருணாதேவியின் உறவினர்கள் இன்று அரசு தலைமை மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....