வாக்காளர்களை விலைக்கு வாங்க அ.தி.மு.க முயற்சி; சிந்தித்து ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் என வாக்காளர்களுக்கு ஆ.ராசா வேண்டுகோள்

கோவை: டாஸ்மாக் லஞ்ச பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்க அ.தி.மு.க முயற்சிக்கிறது எனவும் சிந்தித்து ஜனநாயகத்தை வாக்காளர்கள் காப்பாற்ற வேண்டும் என மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் செய்த ஆ.ராசா வேண்டுகோள் விடுத்தார்.


கோவை: டாஸ்மாக் லஞ்ச பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்க அ.தி.மு.க முயற்சிக்கிறது எனவும் சிந்தித்து ஜனநாயகத்தை வாக்காளர்கள் காப்பாற்ற வேண்டும் என மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் செய்த ஆ.ராசா வேண்டுகோள் விடுத்தார். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

ஓடந்துரை ஊராட்சிக்குட்பட்ட ஊமப்பாளையம் பகுதியில் இன்று தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஆ.ராசா வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய ஆ.ராசா, அ.தி.மு.க டாஸ்மாக்கில் கிடைக்கும் லஞ்ச பணத்தை கொண்டு வாக்காளர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்

அரசு மதுபானக்கடையில் விற்கப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் சாதாரணமாக 15 ரூபாய் கூடுதலாக விற்று ஒரு மாதத்தில் முந்நூறு முதல் நானூறு கோடி வரை லஞ்சம் ஈட்டும் அ.தி.மு.க, அந்த பணத்தை வைத்து வாக்கு ஒன்றிற்கு தலா ரூ.500, ரூ.1000 கொடுத்து விலைக்கு வாங்கிவிடலாம் என திட்டமிட்டுள்ளது. 

வாக்காளர்களே அ.தி.மு.க கொடுக்கும் பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் அது உங்களுடையது ஆனால், வாக்களிக்கும் போது ஜனநாயகத்தை மறக்காமல் சிந்தித்து வாக்களியுங்கள், தி.மு.கவிற்கு வாக்களியுங்கள் அப்போது தான் உங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் நபர்கள் பொறுப்பில் இருப்பார்கள் என்று வாக்கு சேகரித்தார்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....