கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தியதாக சிற்றுண்டி நிலையத்திற்கு மாநகராட்சி நிர்வாகம் மூன்றாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

கோவை மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறித்து அவ்வப்போது மாநகராட்சி நகர் நல அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, இன்று உதவி நகர் நல அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் உணவகத்துக்கு 3000 ரூபாய் அபராதம் விதித்து, பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதற்கு அபராதம் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இனிமேல் பார்சல் தரப்படாது எனவும், பார்சலுக்கு பாத்திரம் கொண்டு வரவும் என அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.