கோவை: அ.தி.மு.கவிற்கு வாக்களித்தால் நல்ல திட்டங்கள் வரும் எனவும் தி.மு.கவிற்கு வாக்களித்தால் செல்லாத ஓட்டுகளாக போகும் என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்காவிற்குட்பட்ட காரமடை ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி இன்று ஆலாங்கொம்பு, பெத்திகுட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது மக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் வேலுமணி, அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் அது பல நல்ல திட்டங்களை உங்கள் பகுதிக்கு கொண்டுவந்து சேர்க்கும் ஆனால், தி.மு.கவிற்கு வாக்களித்தால் அது செல்லாத ஓட்டுக்களாகத்தான் மாறுமே தவிர பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பலன் அளிக்கக்கூடியதாக இருக்காது என்று பேசினார்.
தி.மு.கவினர் கூட்டமாக வாக்கு சேகரிக்க வருவார்கள் ஆனால், ஒட்டு வாங்கிவிட்டு பின்னர் மக்களை சந்திக்க வரமாட்டார்கள் என கூறிய அமைச்சர், நாடாளுமன்ற தேர்தலில் 38 தி.மு.க எம்பிக்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றனர். ஆனால் எந்தவித நன்மையும் அதனால் தமிழகத்திற்கு ஏற்படவில்லை என்பது அனைவரும் இன்று அறிந்துகொண்டதாக கூறினார்.

மேலும், மக்கள் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த தற்போது உள்ள அரசால் மட்டுமே வழங்க முடியும் என பேசிய அமைச்சர், அம்மா வழியில் ஆட்சி நடத்தும் தற்போதைய அரசு கோவையில் சாலை, குடிநீர், இலவச வீடுகள், இலவச பட்டா என மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அ.தி.மு.க அரசு வழங்கி வருவதாகவும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களித்து ஆதரவு அளித்து வெற்றிபெற செய்ய வேண்டும், அப்போது தான் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதுடன் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த முடியும் என அவர் வாக்கு சேகரித்தார்.