குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது - ஆ.ராசா எம்பி

நீலகிரி: குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக, பாமக நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது என்று உதகையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.

நீலகிரி: குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக, பாமக நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது என்று உதகையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.



நாடு முழுவதும் புதிதாக கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்திப் பல கட்டங்களாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஏடிசி பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.



இதில் கலந்து கொண்டு பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ,ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்திய திருநாட்டிற்கு ஒளி விளக்கை ஏற்றும் அளவிற்கு மாபெரும் கண்டன பேரணி சென்னையில் நடத்தி காட்டியுள்ளதாகவும் பங்களாதேஷ், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் போன்ற மாநில அரசுகள் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அறிவித்துள்ள நிலையில், ஒரு மதத்தை குறிவைத்தும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை ஒதுக்கி வைக்கும் வகையிலும் தமிழகத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம் இருக்கின்ற ஒவ்வொரு நாளும் இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்தியாவின் மதச்சார்பின்மைக்கும் ஆபத்து என்பதை மக்களிடத்தில் எடுத்துச் செல்லவேண்டும் என்றார்.



தமிழகத்தை சேர்ந்த அதிமுக எம்பிக்கள் 11 பேரும், பாமக எம்பி ஒருவர் என மொத்தம் 12 வாக்குகளை மத்திய அரசுக்கு ஆதரவாக குடியுரிமை சட்டத்திற்கு வாக்களித்த இவர்களை தமிழ்நாட்டிற்குள் நுழைய விடுவதே தவறு என்று கூறினார். இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் முபாரக், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், தமுமுக மாவட்ட செயலாளர் சமத் உட்பட்ட இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....