கோவையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு; மாவட்டத்தில் 29 லட்சத்து 23 ஆயிரத்து 837 வாக்காளர்கள்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.



தமிழகம் முழுவதும் இன்று வரை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவையில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இராசாமணி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, கோவையில் 10 சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 14,48,031 பேரும், பெண் வாக்காளர்கள் 14,75,461 பேரும், மாற்று பாலினத்தவர் 345 பேர் என மொத்த வாக்காளர் 29,23,837 உள்ளதாக அவர் தெரிவித்தார்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் இராசாமணி, 01-01-2020 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டதன் பேரில் கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

டிச., 23ம் தேதி வரை எடுக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் படி கோவையில் 29,23,837 வாக்காளர்கள் உள்ளதாகவும், வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றம், பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு விண்ணப்பங்களை 23-12-2019 முதல் 22-01-2019 முடிய அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து வாக்குப்பதிவு மையங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 14, 2020 அன்று வெளியிடப்படும் என்று தெரிவித்த ஆட்சியர் இராசாமணி, இதுவரை கோவையில் எங்கும் பண பறிமுதல்கள் ஏதும் இல்லை என்றும் பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க இருப்பதாக தெரிவித்தார். மேலும், ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை எடுப்பவர்கள் இ- சேவை மையத்தை அணுகி அடையாள அட்டையைப் பெற்று கொள்ளலாம் என கூறிய அவர், இதுவரை கோவையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வீடுகளில் போஸ்டர் ஒட்டிய விதிமீறல் புகார் வந்துள்ளதாகவும் அது குறித்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....