கோவையில் கிறிஸ்து பிறப்பை நினைவு கூறும் வகையில் கிறிஸ்துமஸ் பாடல் திருவிழா

கோவை: கிறிஸ்து பிறப்பை நினைவு கூறும் வகையில் கோவையில் அனைத்து திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் பாடல் திருவிழா தூய மிக்கேல் பேராலயத்தில் நடைபெற்றது.


கோவை: கிறிஸ்து பிறப்பை நினைவு கூறும் வகையில் கோவையில் அனைத்து திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் பாடல் திருவிழா தூய மிக்கேல் பேராலயத்தில் நடைபெற்றது.



கோவை மாவட்ட அனைத்து திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் பாடல் திருவிழா டவுன்ஹால் அருகில் உள்ள தூய மைக்கேல் பேராலயத்தில் நடைபெற்றது. கிறிஸ்து பிறப்பை நினைவு கூறும் வகையில் அனைத்து திருச்சபைகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தது. இதில் அனைத்து திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் பாடல், நடனங்கள், கிறிஸ்து பிறப்பு குறு நாடகம் நடைபெற்றது.

இதில் கோவை மறை வாட்ட கத்தோலிக்க திருச்சபை ஆயர் தாமஸ் அக்குவினாஸ், முதன்மை குரு ஜான் ஜோசப், சி.எஸ்.ஐ பேராயர் திமோத்தி ரவீந்தர், டி.ஈ.எல்.சி கண்காணிப்பாளர் கிறிஸ்டோபர் மனுவேல் செல்லப்பா, பெந்தகோஸ்தே சபைகளின் சார்பாக போதகர் ஹேரி கோம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாட்டு தொழுவத்தில் குழந்தை ஏசு பிறந்ததை நினைவு கூறும் வகையில் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து சபைகளின் பாடகர்கள் கிறிஸ்து பாடல்களை பாடினர். இந்நிகழ்ச்சியையொட்டி ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...