பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்டு ஜி.டி. விஷ்ணு ராமுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் London World Book of Records அமைப்பின் சார்பில் உயரிய விருது வழங்கப்பட்டது. தனுஷ்கோடி முதல் கோவை வரை 500 கிலோமீட்டரை 15 மணி நேரம் 8 நிமிடங்களில் கடந்த சாதனைக்காக இவருக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.


Coimbatore: பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணத்தில் உலக சாதனை படைத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் சைக்கிளிஸ்டுமான ஜி.டி. விஷ்ணு ராம் அவர்களுக்கு, பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

London World Book of Records என்ற அமைப்பின் சார்பில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் House of Commons அவையில் நடைபெற்ற சர்வதேச விழாவில், இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக, சைக்கிளிஸ்டும் சமூக ஆர்வலருமான ஜி.டி. விஷ்ணு ராம் சமீபத்தில் தனுஷ்கோடி முதல் கோவை வரை, 500 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 15 மணி நேரம் 8 நிமிடங்களில் மிக வேகமாக கடந்தார்.


இந்த வேகமான சைக்கிள் பயணம் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜி.டி. விஷ்ணு ராம் படைத்த உலக சாதனைக்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலகளவில் 10-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் பங்கேற்ற இந்த சர்வதேச விருது வழங்கும் நிகழ்வில், தென்னிந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டு விருது பெற்ற ஒரே நபர் ஜி.டி. விஷ்ணு ராம் என்பது குறிப்பிடத்தக்கது.


சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த விருது வழங்கப்பட்டிருப்பது, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. இந்த சர்வதேச அங்கீகாரம் இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும், குறிப்பாக கோயம்புத்தூர் மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளது.


இது குறித்து சமூக ஆர்வலர் சைக்கிளிஸ்டு ஜி.டி. விஷ்ணு ராம் கூறுகையில், "இந்த அங்கீகாரமானது சமூக விழிப்புணர்வு பயணத்திற்கு ஒரு புதிய தொடக்கம். சைக்கிளிங் வாயிலாக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளைஞர்களை ஆரோக்கியமான, ஒழுக்கமான வாழ்க்கை முறைக்கு ஊக்குவிக்கவும் தொடர்ந்து செயல்படுவேன்" என்றார்.


"2026-ஆம் ஆண்டில் 2026 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணம் செய்து, போதைப்பொருள் இல்லாத தமிழகம் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை வீரியத்துடன் எடுத்துச்செல்ல திட்டமிட்டிருக்கிறேன். தமிழ்நாட்டின் முதல்வர் Joseph Vijay அவர்களின் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைக்கு உறுதுணையாக எங்களது பயணம் அமையும்" என சைக்கிளிஸ்டு ஜி.டி. விஷ்ணு ராம் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...