நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் மலை ரயிலை தென்னக ரயில்வே கோட்ட பொது மேலாளர் சுப்பாராவ் நேரில் ஆய்வு செய்தார்.

உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணித்து, நீலகிரி மலையின் இயற்கை எழிலைக் கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். இந்த நிலையில், தென்னக ரயில்வே கோட்ட பொது மேலாளர் சுப்பாராவ் குன்னூர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, ரயில் நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் கவரும் விதமாக புதியதாக ரயில்வே கேப்டன் கோட் மற்றும் தொப்பி அணிந்த ரயில் என்ஜின் முன் நின்று புகைப்படம் எடுக்கும் லாேகாே பைலட் முறை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அதற்கென சிறிய தொகையை வசூலிக்கப்படும் என்ற திட்டத்தை தொடக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், குன்னூர் முதல் ரன்னிமேடு வரை இயக்கப்பட்ட மலை ரயில் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் நாளை முதல் மீண்டும் இயக்கப்படும் என்றும், உதகை - கேத்தி இடையிலான சிறப்பு மலை ரயில் தொடர்ந்து இயக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தென்னக சேலம் கோட்ட முதன்மை மண்டல மேலாளர் (வணிகம்) ஹரிகிருஷ்ணன், முதன்மை மண்டல செயல் மேலாளர் ஹிரி, முதன்மை மண்டல தொழில்நுட்ப பிரிவு மேலாளர் முகந்தன்.குன்னூர் ரயில் நிலைய மேலாளர் பிரதீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.