தென்னிந்திய அளவிலான பூனைகள் கண்காட்சி; பூனைகளால் நோய் பரவுவதாக மக்களிடையே பெருமளவில் மூட நம்பிக்கை உள்ளது - பூனைகள் வளர்ப்பு கூட்டமைப்பினர்

கோவை: பூனைகளால் நோய் பரவுகிறது என்ற மூட நம்பிக்கை இன்னும் மக்களிடையே பெருமளவில் உள்ளதாக பூனைகள் வளர்ப்பு கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.


கோவை: பூனைகளால் நோய் பரவுகிறது என்ற மூட நம்பிக்கை இன்னும் மக்களிடையே பெருமளவில் உள்ளதாக பூனைகள் வளர்ப்பு கூட்டமைப்பினர் தெரிவித்தனர். 



கோயமுத்தூர் கேட்டரி கிளப் சார்பில் சர்வதேச கிறிஸ்துமஸ் சாம்பியன்ஷிப், பூனைகள் கண்காட்சி மற்றும் பேஷன் ஷோ அவினாசி சாலையில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. கேரளா ஹைதராபாத், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 150க்கும் மேற்பட்ட பூனைகள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன. 

தமிழகத்தில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த கண்காட்சியில் பொதுமக்கள் பூனைகளின் வகைகளை அறிந்து கொள்ளவும் அதனை பாதுகாத்திடும் நோக்கில் இந்த சர்வதேச பூனை கண்காட்சி நடத்தப்படுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.



இந்த கண்காட்சியில் பெர்சியன், பெர்சியன் லாங்ஹேர், சியமிஸ், மெயின் கவுன், பிரிட்டிஷ் ஷார் ஹேர் உள்ளிட்ட 20 வகையான பூனைகள் இடம் பெற்று இருந்தது. இன்று துவங்கிய இந்த பூனை கண்காட்சி நாளை வரை நடக்கிறது. இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பூனைகளுக்கு பேஷன் ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாகவும் இதில் வெற்றி பெறும் பூனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

பூனைகள் குறித்து பல்வேறு வகையான தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும் 

பூனைகளால் நோய் பரவுகிறது என்ற மூட நம்பிக்கை இன்னும் மக்களிடையே பெருமளவில் உள்ளது என பூனை வளர்பவர்கள் தெரிவித்தனர். தற்போதைய குழந்தைகள் கார்டூன் மற்றும் விளையாட அதிக அளவில் அலைபேசியை உபயோகித்து வருகின்றனர். இதனால் மனரீதியாகவும் உடல் ரீதியாக பாதிப்புகளை தவிர்க்க செல்ல பிராணிகளுடன் தங்களது நேரத்தை செலவிட வேண்டும் என்றனர். 

தமிழகத்தில் பூனைகளுக்கு என முதல் முறையாக இந்த கண்காட்சி நடப்பதாகவும் இது பூனை வளர்ப்பவர்களுக்கு இடையே வரவேற்பைப் பெற்று உள்ளதாக பூனை வளர்ப்பு உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்த பூனைகள் கண்காட்சி தங்களை வெகுவாக கவர்ந்ததாக அங்கு இருந்த பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...