கோவை: மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்ட இடங்களை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் ஆய்வு செய்தார்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணித்து, நீலகிரி மலையின் இயற்கை எழிலைக் கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர்.

இந்த ரயில் பாதையில் மழைக்காலங்களில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுவதால், மலை ரயிலின் பயணம் தடைப்பட்டு வருகிறது. இதையடுத்து சேலம் கோட்ட ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் மண்சரிவு ஏற்பட்ட இடங்களை ஆய்வு செய்வதற்காக மேட்டுப்பாளையம் வந்து அங்கு இருந்து சிறப்பு ரயில் மூலம் ஆய்வு செய்வதற்காக புறப்பட்டுச் சென்றார்.
அப்போது பேசிய அவர், மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் ரயில் தண்டவாளங்களில் ஆய்வு செய்யப்படும் என்றும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக லிப்ட் அமைத்து தரப்படும் என்றும் தெரிவித்தார்.