கோவை: மேட்டுப்பாளையத்தில் பணி சுமைகளால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க தன் குரல் வளத்தால் அழகாக பாடி அசத்தும் வன காப்பாளர் சோழ மன்னனின் பாடல் வைரலாக வருகிறது
கோவை: மேட்டுப்பாளையத்தில் பணி சுமைகளால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க தன் குரல் வளத்தால் அழகாக பாடி அசத்தும் வன காப்பாளர் சோழ மன்னனின் பாடல் வைரலாக வருகிறது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதி, அடர்ந்த மலைகள் வானுயர்ந்த மரங்கள் மற்றும் அனைத்து விதமான வனவிலங்குகள் வசிக்கும் பகுதியாக மேட்டுப்பாளையம் திகழ்கிறது. எனவே வனம் சார்ந்த படிப்புகள் மற்றும் வனத்துறையில் தேர்வு செய்யப்படும் வன அதிகாரிகளுக்கான பயிற்சி என்பது மேட்டுப்பாளையத்தில் தான் அதிக அளவில் களப்பயிற்சி அளிக்கப்படுகிறது
அதன்படி வனத்துறையில் வனச்சர அலுவலக பணிக்கு தேர்வானவர்களுக்கான வன உயிரினங்கள் குறித்த களபயிற்சி கடந்த ஒரு வாரமாக அளிக்கப்பட்டு வருகிறது. காடுகள், மலைகள் என கடின பயிற்சி மேற்கொண்டு வரும் இந்த அலுவலகர்களுக்கு ஏற்படும் கலைப்பை போக்க வனக்காப்பாளரின் மெல்லிசை பாடல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது
சோழமண்ணன் என்ற அந்த வனக்காப்பாளர் சக நண்பர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க என்ன சத்தம் இந்த நேரம் என்று பாடிய பாடல் அனைவரின் நெஞ்சையும் வருடி செல்லும் வகையில் மிகவும் இதமான மெல்லிசை பாடலானது தற்போது வனத்துறையில் பேசும் பாடலாக மாறியுள்ளது. பணி சுமைகளால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க தன் குரல் வளத்தால் அழகாக பாடி அசத்தும் வன காப்பாளர் சோழ மண்ணனின் பாடல் வைரலாக வருகிறது
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தனித்திறமை உள்ளது. அது ஏதாவது ஒரு சமயத்தில் தான் வெளிப்படுகிறது. அப்படி தனது குரல் வளத்தில் அனைவரையும் வசீகரித்து இழுக்கும் வகையில் பாடலை பாடி அசத்தியுள்ளார் வனக்காப்பாளர் சோழமண்ணன். இவரது பாடல் திறமையை கண்டு தற்போது அனைவரும் அவரை பாராட்டி வருகின்றனர்.