கோவை: குடியுரிமை சட்ட திருத்தம் என்பது தேசத்தை காக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வந்த சட்டம் என பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை: குடியுரிமை சட்ட திருத்தம் என்பது தேசத்தை காக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வந்த சட்டம் என பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், இந்த தேசம் என்பது ஒரு சத்திரம் போல, யார் வேண்டுமானாலும் குடியேறலாம், யார் வேண்டுமானாலும் கலவரத்தை உண்டு பண்ணலாம் என்ற நிலையை மாற்றி தேச நலனில் அக்கறை கொண்டு இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பையும் இந்த மசோதா ஏற்படுத்தவில்லை என்றவர், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தில் ஸ்டாலின், திருமாவளவன், வைகோ போன்றவர்கள் பங்களாதேஷிலிருந்து வரும் மக்களை பாதுகாக்க வேண்டும் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளதாக தெரிவித்தார்.
எல்லை பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலைக் இந்த சட்டம் தடுக்கிறது என்றும் திமுக தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்க வேண்டும் என உழைக்கிறார்கள் என்றவர், திமுகவும் கூட்டணி கட்சிகளும் முஸ்லிம் மத வெறியை தூண்டுவதாக கூறினார்.
அதேபோல, இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக பிரதமர் ஒருவார்த்தை கூட பேசவில்லை என்றும் இஸ்லாமிய தீவிரவாதிகளை தூண்டும் விதமாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முயல்கிறது என்றார்.
மேலும், இங்குள்ள இலங்கை தமிழர்கள் ஈழத்தில் குடியேறினால் மட்டுமே அங்குள்ள தமிழர்களுக்கு உரிமைகளை நிலைநாட்டுவதற்கும் பாதுகாப்பதற்கும் உதவும் என்று கூறிய அவர், அவ்வாறு தமிழர்கள் மீறி வந்தால், நமது அரசு அதைக் கனிவுடன் பரீசிலிக்கும் என்று கூறினார்.