கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 6956 பேர் போட்டி; 262 பேர் போட்டியின்றி தேர்வு

கோவை: கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 6956 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்; 262 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கோவை: கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 6956 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்; 262 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. அதன்படி, வரும் 27, 30 ஆகிய தேதிகளில் கோவையில் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ம் தேதி முதல் துவங்கி, 16ம் தேதியுடன் முடிவடைந்தது.

கோவை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இதில் 228 ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. மேலும், 228 கிராம ஊராட்சிகளில் 2,034 வார்டு கவுன்சிலர், 155 மாவட்ட கவுன்சிலர், 228 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவி, 17 மாவட்ட வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. 

இந்தநிலையில், மொத்தம் 8727 பேர் மனு தாக்கல் செய்தனர். அதில் 161 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, 1348 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன மீதம் உள்ள 7218 வேட்பு மனுக்களில் 262 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆக, மொத்தம் 6956 பேர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர். 

அதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 72 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 596 , ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 778, ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5510 பேர் போட்டியிடுகின்றனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....