கோவை ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ பறக்கும்‌ படை அலுவலர்களுடன் தேர்தல்‌ பார்வையாளர்‌ ஆலோசனை

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ இன்று (20.12.2019) ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ பறக்கும்‌ படை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்‌ கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ பார்வையாளர்‌ ஜி.கோவிந்தராஜ்‌ மற்றும்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌/மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி ஆகியோர்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ இன்று (20.12.2019) ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ பறக்கும்‌ படை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்‌ கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ பார்வையாளர்‌ ஜி.கோவிந்தராஜ்‌ மற்றும்‌ மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌/மாவட்ட ஆட்சியர்‌ கு.இராசாமணி ஆகியோர்‌ தலைமையில்‌ நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ இராமதுரைமுருகள்‌, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்‌ திட்ட இயக்குநர்‌ ரமேஷ்குமார்‌, கூட்டுறவு சங்கங்களின்‌ இணைப்பதிவாளர்‌ பழனிசாமி, மகளிர்‌ திட்ட இயக்குநர்‌ செல்வராஜ்‌, மாவட்ட வழங்கல்‌ அலுவலர்‌ குமரேசன்‌, உதவி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

இந்த கூட்டத்தில்‌ கோவை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ பார்வையாளர்‌ ஜி.கோவிந்தராஜ்‌ தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையத்தால்‌ ஊரக உள்ளாட்சி தேர்தல்கள்‌ 27.12.2019 வெள்ளிக்கிழமை அன்றும்‌, 30.12.2019 திங்கட்கிழமையும்‌ இரண்டு கட்டங்களாக தேர்தல்‌ நடத்திட அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில்‌ ஊரக உள்ளாட்சி பதவிகளான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்‌, ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்‌, கிராம ஊராட்சித்‌ தலைவர்‌ மற்றும்‌ கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்‌ ஆகிய பதவிகளுக்கு நேரடித்‌ தேர்தல்‌ நடைபெறவுள்ளது.

கோவை மாவட்டத்தில்‌ மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி(வடக்கு)) பொள்ளாச்சி(தெற்கு) ஆனைமலை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில்‌ 27.12.2019 அன்று முதற்கட்ட வாக்குப்பதிவும்‌, காரமடை, அன்னூர், சர்க்கார்சாமக்குளம்‌, பெரியநாயக்கன்பாளையம்‌, சூலூர்‌, தொண்டாமுத்தூர்‌, சுல்தான் பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில்‌ 30.12.2019 அன்று இரண்டாம்‌ கட்ட வாக்குப்பதிவும்‌ நடைபெற உள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையத்தின்‌ அறிவுரையின்படி, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ மூலம்‌ சிறப்பான முறையில்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில்‌, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ நடைபெறும்‌ 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு பறக்கும்‌ படை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வட்டாட்சியர்‌ தலைமையில்‌ காவல்‌ துறை அலுவலர்கள்‌, ஒளிப்பதிவாளர்‌ ஆகியோர்‌ கொண்ட ஒரு பறக்கும்‌ படை குழுவாகும்‌. இரண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு பறக்கும்படை குழு வீதம்‌ அமைக்கப்பட்டு மூன்று ஷிப்டாக்‌ சுழற்சிமுறையில்‌ 24 மனரி நேரமும்‌ பணியாற்றிட மொத்தம்‌ 18 பறக்கும்படை குழுக்கள்‌ தேர்தல்‌ பணியில்‌ ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்‌. இப்பறக்கும்படை குழுக்கள்‌, 24 மணிநேர தொடர்‌ கண்காணிப்பில்‌ ஈடுபட்டு, முறைகோடகவும்‌, போதிய ஆவணங்கள்‌ இல்லாமலும்‌ ஊரக பகுதிகளில்‌ கொண்டு செல்லும்‌ எவ்வித ரொக்கம்‌, பரிசுப்பொருட்கள்‌, மதுபானம்‌, ஆயுதங்கள்‌, வெளிநாட்டு பணம்‌ மற்றும்‌ இதரபொருட்கள்‌ எதுவானாலும்‌ உரிய விசாரணைகளின்‌ அடிப்படையில்‌ பறிமுதல்‌ செய்திடல்‌ வேண்டும்‌.

தேர்தல்‌ நடைமுறைகள்‌ அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில்‌, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ தேர்தல்‌ விதிகளுக்குப்‌ புறம்பாக, உரிய ஆவணங்களின்றி ரூ.10,000/- மதிப்பிற்கு அதிகமான பரிசுபொருட்கள்‌, மதுபானம்‌, ஆயுதங்கள்‌ மற்றும்‌ உரிய ஆவணங்களின்றி ரூ.50,000/- க்கு மேல்‌ கொண்டு செல்லப்படும்‌ பணம்‌, ஆகியவை அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள பறக்கும்படை குழுவினரால்‌ பறிமுதல்‌ செய்யப்படும்‌. பறக்கும்‌ படை குழுவினரால்‌ மேற்கொள்ளப்படும்‌ ஆய்வுகள்‌ அனைத்தும்‌ முழுமையாக ஒளிப்பதிவு செய்யப்படவேண்டும்‌.

ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ குறித்தான அனைத்து புகார்களை தெரிவிக்க விரும்பும்‌ பொதுமக்கள்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தேர்தல்‌ கட்டுப்பாட்டு அறைக்கு 1800 599 6000 எனும்‌ கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும்‌, மற்றும்‌ 0422 - 2301587 என்ற எண்ணையும்‌ தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்‌. மேலும்‌ மாவட்ட காவல்‌ தேர்தல்‌ கண்காணிப்பு அலுவலக தேர்தல்‌ கட்டுப்பாட்டு, 0422-2966443 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்‌. தேர்தல்‌ கட்டுப்பாட்டு அறை அனைத்து நாட்களிலும்‌ தேர்தல்‌ பணிகள்‌ முடியும்‌ வரை 24 மணி நேரமும்‌ செயல்படும்‌.

மேலும்‌ மாவட்ட முழுவதிலும்‌ ஊரக பகுதிகளில்‌ தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு, அமைதியான முறையில்‌ தேர்தல்‌ நடைபெற அனைத்து அலுவலர்களும்‌ ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்‌ என கோயம்புத்தூர்‌ மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்‌ பார்வையாளர்‌ ஜி.கோவிந்தராஜ்‌ தெரிவித்தார்‌.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....