கோவை: கோவை மாவட்டத்தில் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கடையடைப்பு மற்றும் கருப்புக்கொடி கட்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதைத்தொடர்ந்து மாணவர்கள், பல்வேறு இயக்கங்கள், இஸ்லாமிய அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் தங்களின் போராட்டங்கள் வாயிலாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அறிவிக்கப்பட்டபடி, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் சார்பில் கடையடைப்பு போராட்டம் மற்றும் கருப்பு கொடி கட்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக கோட்டை மேடு, கரும்புக்கடை, குனியமுத்தூர், உக்கடம், டவுன்ஹால், போத்தனூர் போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களின் வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.

அதேபோல, சிறு வணிக நிறுவனங்கள், பெருவணிக நிறுவனங்கள் என கிட்டத்தட்ட 30,000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப் பட்டுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.