நாடு முழுவதும் அச்சத்தையும் கவலையும் அளிக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்- எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

கோவை: "நாடு முழுவதும் அச்சத்தையும் கவலையும் அளிக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை அவசர வழக்காக விசாரித்து குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்", என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.


கோவை: "நாடு முழுவதும் அச்சத்தையும் கவலையும் அளிக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை அவசர வழக்காக விசாரித்து குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்", என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தார். 

கோவை வின்சென்ட் ரோட்டில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-







குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு அரசியலமைப்புக்கு விரோதமாகவும், மதரீதியாக நாட்டு மக்களை பிளவு படுத்தும் வகையிலும் செயல்படுகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் தஞ்சம் புகும் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது. ஆனால் முஸ்லிம்களையும், ஈழத்தமிழர்களையும் புறக்கணிக்கிறது. மத்திய அரசின் இந்த செயல்பாடு மக்களை மத ரீதியாக பிரிக்கும் நடவடிக்கை. 

மோடியின் பாஜக அரசையும், இந்த சட்டத் திருத்தத்துக்கு ஆதரவளிக்கும் ஆளும் அதிமுக அரசையும் வன்மையாக கண்டிக்கிறோம். அதிமுக அரசுக்கு உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். 

நாடு முழுவதும் அச்சத்தையும் கவலையும் அளிக்கும் இந்த சட்டத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை அவசர வழக்காக விசாரித்து குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். அதுவரை எங்களுடைய போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது எஸ்டிபிஐ கட்சி மாநில பொருளாளர் அபுதாகிர், கோவை மத்திய மாவட்ட தலைவர் ராஜா உசேன், மாவட்ட பொதுச்செயலாளர் இசாக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...