கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாக போராட்டங்கள் நடைபெறுவதால், அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாக போராட்டங்கள் நடைபெறுவதால், அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் ஆன்லைன் மூலம் அபராதம் வசூலிக்க இ-சலான் கருவிகள் காவல்துறையினருக்கு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 112 இ-சலான் கருவிகள் காவலர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் டி.ஐ.ஜி கார்த்திகேயன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து டி ஐ ஜி கார்த்திகேயன் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது ;-
16 இ-சலான் கருவிகள் கோவையில் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தியதன் மூலம் இதுவரை 66 ஆயிரம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 112 இ-சலான் கருவிகள் வழங்கியதன் மூலம் வரும் ஜனவரி முதல் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களிடம் அபராதம் வசூலிப்பது சுலபமாக இருக்கும் என்றார்.
மேலும், தமிழகத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்டத்தின் நுழைவு பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர வாகன தணிக்கை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், குடியுரிமை சட்ட திருத்த மசோதா தொடர்பாக போராட்டங்கள் நடைபெறுவதால், அசம்பாவிதங்களை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.