திருப்பூர் இராக்கியாபாளையத்தில் காவல் நிலையம் கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் நெசவாளர்கள் மனு

திருப்பூர்: திருப்பூர் அருகே இராக்கியாபாளையம் பகுதியில் நெசவாளர்கள் உபயோகிக்கும் பாவடி மைதானத்தில் காவல் நிலையம் கட்டுவதை தடுத்த நிறுத்த கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் மனு அளித்தனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே இராக்கியாபாளையம் பகுதியில் நெசவாளர்கள் உபயோகிக்கும் பாவடி மைதானத்தில் காவல் நிலையம் கட்டுவதை தடுத்த நிறுத்த கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், இராக்கியாபாளையம் பகுதியில் 300க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், அப்பகுதியில் நெசவாளர்கள் பாவு நூல் காய வைக்கும் பாவடி மைதானம் உள்ளது. அந்த மைதானத்தில் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்திற்கு புதிய காவல் நிலையம் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகிறது.



இந்நிலையில், நெசவாளர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் தராமல் பாவடி மைதானத்திலுள்ள கற்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இந்த மைதானத்தில் காவல் நிலையம் கட்டினால் தங்களது நெசவு தொழில் பாதிக்கப்படும் என்று கூறி நூற்றுக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஒன்று திரண்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அவர்களின் மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் மனு குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இதனிடையே, காவல்நிலையம் அமைவதை கண்டித்து வரும் திங்களன்று இராக்கியாபாளையம் பகுதியில் ஒருநாள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என நெசவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...