கோவை: மேட்டுப்பாளையம் உள்ள தேக்கம்பட்டி யானைகள் நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகளுக்கு கேரள கூந்தபனை உள்ளிட்ட ஜந்து வகையான பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டு வருகிறது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. 48 நாட்கள் நடைபெறும் யானைகள் நலவாழ்வு முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த திருக்கோவில்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த 28 யானைகள் பங்கேற்றுள்ளன.
வருடம் முழுவதும் மக்களின் மத்தியில் அதீத சப்தங்களுக்கு இடையே ஆலய பணிகளை மேற்கொள்ளும் யானைகளுக்கு முகாமில் புத்துணர்ச்சி அளிக்கவும் அவற்றின் உடல் நலனை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக யானைகள் வன விலங்குகள் என்பதால் அவைகளுக்கு பசுந்தீவனங்கள் மீதே அதீத தேவை இருக்கும், ஆனால் கோவில்களில் போதுமான அளவிற்கு பசுந்தீவனங்களை அளிக்க முடியாமல் போவதால் சாத உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.

இதனால் முகாமில் யானைகளுக்கு அவைகள் விரும்பி உண்ணும் ஜந்து வகையான பசுந்தீவனங்கள் வழங்கப்படுகின்றன. கூந்தபனை, சோளத்தட்டு, மசால்புல், தென்னை மட்டை, கரும்பு போன்றவைகளை யானைகள் மிகுந்து ருசித்து உண்ணுகின்றன. குறிப்பாக யானைகளுக்கு மிகவும் பிடித்த கூந்தபனை அதிக அளவில் கேரளாவில் மட்டுமே உள்ளதால், இவ்வகை முகாமிற்காக சிறப்பு ஏற்பாட்டின் மூலம் யானைகளுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

கோவில்களில் சாத உருண்டைகளை அதிகம் உண்ட யானைகள் பசுந்தீவனங்களை கண்டவுடன் மிகுந்த மகிழ்ச்சி ஆர்வத்துடன் ருசித்து உண்ணுகின்றன.