குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவை தேர்தலில் தோற்கடிப்போம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்

திருப்பூர்: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பாசிச சக்திகளுடன் கூட்டு சேர்ந்த அதிமுகவை இனி வரும் தேர்தலில் தோற்கடிக்கச் செய்வோம் என திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மேலாண்மை குழு தலைவர் சுலைமான் தெரிவித்தார்.

திருப்பூர்: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பாசிச சக்திகளுடன் கூட்டு சேர்ந்த அதிமுகவை இனி வரும் தேர்தலில் தோற்கடிக்கச் செய்வோம் என திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மேலாண்மை குழு தலைவர் சுலைமான் தெரிவித்தார்.



மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், திருப்பூர் மாநகராட்சி எதிரே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்,

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மேலாண்மை குழு தலைவர் சுலைமான், இந்துத்துவாவை கொண்டு வருவதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த சட்ட திருத்த மசோதா சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், இதற்கு எதிராக வாக்களிக்க வேண்டிய அதிமுக இரு அவைகளிலும் ஆதரவாக வாக்களித்து பாசிச சக்திகளுக்கு துணையாக சென்றுள்ளதால் இனி வரும் தேர்தலில் அதிமுகவை தோற்கடிப்போம் எனவும் தெரிவித்தார்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....