கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து அரசு கலை கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, கோவையில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, கோவையில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், பறை இசைத்தும், மத்திய அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியபடி போராட்டம் நடத்தினர். 



இஸ்லாமியர் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்திருப்பதாகவும், இந்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படுமென போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர். 



இதனை தொடர்ந்து, அரசு கலைக்கல்லூரி முதல்வர் வருகின்ற ஜனவரி இரண்டாம் தேதி வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துள்ள நிலையிலும் போராட்டம் தொடர்கிறது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...