பாரதியார் பல்கலை., 36வது பட்டமளிப்பு விழா; ஆளுநர் வருகையின் போது குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் கைது

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக 36வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, பல்கலைக்கழக மாணவர்கள் பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கின் முன்பு குடியுரிமை சட்ட திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக 36வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஆளுநர் வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, பல்கலைக்கழக மாணவர்கள் பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கின் முன்பு குடியுரிமை சட்ட திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை பாரதியார் பல்கலைக்கழக 36வது பட்டமளிப்பு விழா ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் பங்கேற்க வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கு முன் ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் குடியுரிமை சட்ட திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக ஏற்கனவே தகவல் கிடைத்து இருந்ததால் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு இருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை கைது செய்ய முயன்றனர். ஆனால் கைதுக்கு உடன்படாமல் மாணவ, மாணவிகள் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர்.

மேலும், இந்த மசோதா மக்களை பிளவு படுத்தும் விதமாக இருப்பதாகவும், இந்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர். 



இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.

மத்திய அரசின் கவனத்திற்கு கோரிக்கைகள் செல்ல வேண்டும் என்பதற்காக ஆளுநர் வருகையின் போது இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை காவல் துறையினர் கைது செய்தனர். ஆளுநர் வருகைக்கு சில நிமிடங்கள் முன்பு விழா அரங்கிற்கு முன்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்கலைக்கழக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....