உதகை 124வது மலர் கண்காட்சியினை முன்னிட்டு மலர் நாற்று நடும் பணியினை துவங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே மாதம் நடைபெற இருக்கும் 124வது மலர் கண்காட்சியினை முன்னிட்டு மலர் நாற்று நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா துவங்கி வைத்தார்.


நீலகிரி: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே மாதம் நடைபெற இருக்கும் 124வது மலர் கண்காட்சியினை முன்னிட்டு மலர் நாற்று நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா துவங்கி வைத்தார்.



மலைகளின் அரசி என்று போற்றப்படும் நீலகிரிக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நீலகிரிக்கு சிறப்பு கூடுதல் சேர்க்கும் வகையில் பன்னிரண்டு ஆண்டிற்கு ஒரு முறை பூக்கும் நீல குறிஞ்சி மலர் உதகை மரவியல் பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா கூறினார்.



மேலும், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள 124வது மலர்க் காட்சிக்கான மலர் செடிகள் நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் சசி மோகன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாவரவியல் பூங்காவில் மலர் பாத்திகள் அமைத்து 5 லட்சத்திற்கு மேலான 400 வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படும் என்றார். 



கடந்த ஆண்டு 300 வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டு கூடுதலாக 100 வகையான மலர்கள் நடவு செய்யப்படும் என்று தெரிவித்த அவர், ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மலர்களான சைக்லமன், சினரேரியா, கிலக்ஸ்சீனியா, ரனுன்குலல் உள்ளிட்ட பல மலர்கள் இந்த ஆண்டு மலர் காட்சிக்கு சிறப்பு சேர்க்கும் என்று கூறினார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...