குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்தும் கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்தும் கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதை தொடர்ந்து மாணவர்கள் இயக்கங்கள், பல்வேறு கட்சியினர் என தங்களின் எதிர்ப்புகளை போராட்டங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.



இந்த நிலையில், டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்தும், சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.



இந்த உள்ளிருப்பு போராட்டத்தின் போது, கோவை விமான நிலையத்திலிருந்து பி எஸ் ஜி கல்லூரி வழியாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செல்வதையொட்டி கல்லூரி வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, கல்லூரி நிர்வாக தரப்பினர் மாணவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் நிறைவு பெற்றது. 

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....