கோத்தகிரி சாலையில் வாகனங்களை வழிமறிக்கும் ஒற்றை காட்டுயானை; சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

கோவை: மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி சாலையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறும் சாலையில் வாகனங்களை நிறுத்தி இறங்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி சாலையில் வாகனங்களை வழிமறித்த ஒற்றை காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறும் சாலையில் வாகனங்களை நிறுத்தி இறங்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சாலையானது அடர்ந்த வனபப்பகுதியில் அமைந்துள்ளது. இதில், குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய இரு சாலைகள் உள்ள நிலையில் சமீபகாலமாக கோத்தகிரி சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, வனச்சாலையை கடக்க வரும் காட்டுயானைகள் சாலை மார்க்கமாகச் செல்லும் வாகனங்களை அச்சுறுத்தும் வகையில் சாலை ஓரங்களில் நிற்பதால் சுற்றுலா வாகனங்களை இடையில் நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.



இந்த நிலையில், இன்று மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் இரண்டாவது கொண்டை ஊசிக்கு மேல் பகுதியில் வாகனங்கள் சென்றுகொண்டிருந்த போது, அங்கு வந்த ஒற்றை யானை ஒன்று சாலையின் நடுவே நின்று வாகனங்களை மறுத்தது. மேலும் வாகனங்களை மீண்டும் நகர விடாமல் அங்கேயே சுற்றி வந்தது, பின்னர் அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு காரையும் தாக்கி சேதப்படுத்தியது. இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் வாகன ஓட்டிகள் சப்தம் எழுப்பியதால் அந்த யானை அங்கிருந்து சென்றது. தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் கோத்தகிரி சாலையில் அதிக அளவில் இருப்பதாக கூறும் வனத்துறையினர் வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறும் சாலையில் வாகனங்களை நிறுத்தி இறங்க வேண்டாம் என சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...