கோவை காந்திபுரம் அருகே அகல் விளக்கு ஏற்றிய போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து

கோவை: கோவை காந்திபுரம் அருகே பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் சிறுமிகள் வீட்டில் அகல் விளக்கு ஏற்றிய போது எதிர்பாராதவிதமாக வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை காந்திபுரம் அருகே பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் சிறுமிகள் வீட்டில் அகல் விளக்கு ஏற்றிய போது எதிர்பாராதவிதமாக வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை காந்திபுரம் 5வது வீதியில் வசித்து வரும் சுரேஷ் பிளம்பிங் தொழில் செய்து வருகிறார். இவர் தனது ஐந்தாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு படித்து வரும் இரு மகள்களை வீட்டிலேயே விட்டு விட்டு தனது மனைவி மற்றும் மகனை அழைத்துக்கொண்டு திருச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து சிறுமிகளின் தாயார் நேற்று மாலை தொலைபேசி மூலம் அழைத்து அவர்களை வீட்டில் அகல் விளக்கு ஏற்றும்படி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அகல்விளக்கை மெத்தையருகே ஏற்றிய சிறுமிகள் கதவை பூட்டி விட்டு விளையாட சென்றுள்ளனர்.



பின்னர் விளக்கு தவறுதலாக மெத்தையில் பட்டு, வீடு முழுக்க தீ பரவியது.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தங்களது கடும் முயற்சியால் தீயானது வேற பகுதிகளுக்குப் பரவாமல் தடுத்தனர்.



 இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...