நீலகிரி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வங்கி கடன் பெற்று தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பொள்ளாச்சியைச் சேர்ந்த பெண்மணியை நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உதகையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சியை சேர்ந்த ரூபினி பிரியா என்ற பெண்மணி பல்வேறு மாவட்டங்களில் மகளிர் குழுக்களிடம் இருந்தும், தனி நபர்களிடம் இருந்தும் வங்கி கடன் வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் பெற்றுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணம் பெற்றுக் கொண்டவர்களிடம் எவ்வித தொகையும் தராமல் காலதாமதம் செய்து வந்துள்ளார்.
இதையடுத்து அவரிடம் பணம் கொடுத்த நீலகிரி மாவட்டம் எமரால்ட் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேலு என்பவர் குற்றவியல் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகார் கொடுத்ததின் பேரில், பொள்ளாச்சியில் உள்ள ரூபினி பிரியாவை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து பணம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள் 30க்கும் மேற்பட்டோர் பணம் கேட்டு குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
அப்போது, பணம் கொடுத்து ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் கூறுகையில், மகளிர் குழுக்களிடம் 100 ரூபாய் வீதம் 18 லட்ச ரூபாயும் தனிநபர் கடனுக்காக நபருக்கு ஒரு லட்சத்திற்கும் மேலாகவும் வீட்டு கடன், வாகன கடன் போன்றவைகளை பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் தொகையை பெற்றுக் கொண்டுள்ளார். கடந்த மூன்று வருடத்தில் இவரிடம் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களில் கடந்த மாதம் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் பணத்தைப் பெற்றுக்கொண்ட ரூபினி பிரியா யாருக்கும் பதிலேதும் சொல்லாமல் அலைக்கழித்துள்ளதாக கூறினர்.