கேந்திரிய வித்யாலயா பள்ளி விவகாரம்; ஆசிரியர்கள் மீது புகார் அளித்த மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு..!

கோவை: கோவை கேந்திரிய வித்யாலயா பொறுப்பு தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் பள்ளி மாணவர்கள் 2 பேர் மீதும் அவர்களின் பெற்றோர் மீதும் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை: கோவை கேந்திரிய வித்யாலயா பொறுப்பு தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் பள்ளி மாணவர்கள் 2 பேர் மீதும் அவர்களின் பெற்றோர் மீதும் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹேம் ராம்சிங் கோவை திருச்சி சாலையில் உள்ள சூலூர் விமான தளத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன்கள் அதே பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 11ம் வகுப்பும், மற்றொருவர் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஹேம் ராம்சிங்கின் மகன்களை குறும்பு செய்ததாகவும், செல்போன் பயன்படுத்தியதாகவும் கூறி அப்பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அடித்து உடல் மற்றும் மன ரீதியாக சித்திரவதை செய்ததாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து அவர்கள் சூலூர் காவல் நிலையத்தில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து மர்ம உறுப்புகளில் தாக்கி மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியதாக புகார் அளித்தனர். இதையடுத்து, சூலூர் போலீசார் பள்ளியின் முதல்வர் மேகநாதன், ஆசிரியைகள் திவ்யா, தமிழரசி மற்றும் அருணா ஆகியோர் மீது போக்சோ சட்டம் 7,8 இந்திய தண்டனை சட்டம் 506(2) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், பள்ளி ஆசிரியர்கள் மீது புகார் அளித்த பாதிக்கப்பட்ட மாணவர்களை போலீசார் பாதுகாப்பு காரணம் கருதி பள்ளி வளாக பகுதியிலிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் இரவு நேரம் ஆகியும் காவல் நிலையத்திலிருந்து புகார் அளித்த மாணவர்கள் இருவரும் விடுவிக்கப்படவில்லை என்ற தகவல் மாணவர்களின் பெற்றோர் தரப்பில் இருந்து வெளியானது. இதையடுத்து, மாணவர்களின் நிலை குறித்து சைல்டு லைன் அதிகாரிகள் தரப்பில், பெற்றோர்கள் தான் குழந்தைகளை மீட்க வரவில்லை என தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் இருவரும் நேற்று இரவு குழந்தைகள் நல குழுவினர் மற்றும் சைல்டு லைன் அதிகாரிகள் முன்னிலையில் கோவை உக்கடம் பகுதியில் உள்ள டான் போஸ்கோ இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளியின் தலைமையாசிரியர் (பொறுப்பு) நாகேந்திரன் (49) கொடுத்த புகாரின் பேரில் 15 வயது மதிப்புள்ள 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் மீதும், அவரது சகோதரரான 13 வயது மதிப்புள்ள ஒன்பதாவது படிக்கும் மாணவன் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துடன் இவர்களது பெற்றோர்களான சூலூர் விமானப்படையில் பணி புரியும் ஹரே ராம் சிங், மற்றும் தாயார் சீலா குமாரி ஆகியோர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 447 ,353, 109 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். பள்ளி மாணவர்கள் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் குழந்தைகள் நல ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....