கோவையில் பள்ளி சுற்றுசுவர் இடிந்து விபத்து; மாணவனுக்கு எலும்பு முறிவு

கோவை: கோவை அடுத்த ராமநாதபுரம் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவனுக்கு கால் முறிவு ஏற்பட்டது.

கோவை: கோவை அடுத்த ராமநாதபுரம் பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளியின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவனுக்கு கால் முறிவு ஏற்பட்டது.

கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதி 80 அடி சாலையில் இயங்கி வரும் அரசு துவக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் பின்புறம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று துவக்கப்பள்ளியின் சுவர் இடிந்து விழுந்த நிலையில், மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவன் சுவர் மீது ஏறி வெளியே செல்ல முயன்று உள்ளார். அப்போது, சுற்றுசுவர் இடிந்து விழுந்து மாணவனுக்கு கால் முறிவு ஏற்பட்டது.

இதனையடுத்து, அந்த மாணவன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பள்ளி சுவர் இடிந்து விபத்து ஏற்படுத்தியது குறித்தும், பள்ளி சுவர் விரிசல் ஏற்பட காரணமான மரத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து அந்த பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, அரையாண்டு தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவன் துவக்கப்பள்ளி அருகே அமைந்துள்ள மரத்தின் மீது ஏறி சுற்றுசுவரை தாண்டி குதிக்க முயன்ற போது விபத்து ஏற்பட்டதாகவும், அதனை உடனடியாக சரியாக சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருவதாக தெரிவித்தனர்.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...