தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை - திருமாவளவன் குற்றச்சாட்டு

கோவை: தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை எனவும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட்ட வேண்டும் என கோவையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை எனவும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட்ட வேண்டும் என கோவையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் 20 அடி உயரம் கொண்ட சுற்றுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இதற்கு நீதி கேட்டு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விதிகளுக்கு புறம்பாக திட்டமிட்டு தீண்டாமை சுவர் எழுப்பி உள்ளதாகவும், இதற்கு காரணமான உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போராடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதை திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.



இதனையடுத்து பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றும் தலித்து மக்களுக்கு எதிராக அதிமுக அரசு செயல்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார். குடி உரிமை சட்டத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டும் எனவும் இது இஸ்லாமியர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கு எதிரான சட்டம் என தெரிவித்தார். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது அரசு பாசிசத்தை ஏவுவதாக குற்றம்சாட்டிய அவர், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெரும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....