குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு; ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினருக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு

கோவை: குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் போலீசாரிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் போலீசாரிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது. அண்டை நாடுகளில் இருந்து குடிபெயரும் முஸ்லிம் அல்லாதவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.



இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவினை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் நிருபன் சக்கரவர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்து ரயில் நிலைய வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறை பாதுகாப்பை மீறி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றதால் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 



இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 32 பேரை போலீசார் கைது செய்ய்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.



பின்னர் பேசிய இந்திய மாணவர் சங்க துணைத் தலைவர் ரூபன் சக்கரவர்த்தி, இஸ்லாமியர்கள் மட்டும் இலங்கைத் தமிழர்களை புறக்கணிக்கும் வகையிலான சட்டமாக இந்த சட்டம் உள்ளதாகவும் இதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் இந்த சட்ட மசோதாவை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும் என தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...