உதகையில் ஒயர் அறுந்து மூன்று பேர் பலி: நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் உடல்களை வாங்காமல் காத்திருப்பு போராட்டம்

நீலகிரி: உதகை அருகே அத்திக்கல் பகுதியில் நேற்று விவசாய நிலத்தில் மின் மாேட்டார் ஒயர் அறுந்து மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிந்தது தாெடர்பாக நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கூறி உறவினர்கள் உடல்களை வாங்காமல் மருத்துவமனையி்ல் இரண்டு மணிநேரம் காத்திருப்பு பாேராட்டத்தில் ஈடுபட்டதால் உதகை அரசு மருத்துவனை வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது.


நீலகிரி:  உதகை அருகே அத்திக்கல் பகுதியில் நேற்று விவசாய நிலத்தில் மின் மாேட்டார் ஒயர் அறுந்து மூன்று பேர் அடுத்தடுத்து உயிரிந்தது தாெடர்பாக நில உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கூறி உறவினர்கள் உடல்களை வாங்காமல் மருத்துவமனையி்ல் இரண்டு மணிநேரம் காத்திருப்பு பாேராட்டத்தில் ஈடுபட்டதால் உதகை அரசு மருத்துவனை வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது. 

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அத்திக்கல் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று பணிகளை முடித்துவிட்டு பாலன், குமார், மணியம்மா ஆகிய மூன்று பேர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் அப்போது தண்ணீர் இரைக்கும் மின் மோட்டார் ஆப் செய்ய வந்தபோது மின் மோட்டாரில் இருந்த மின் கம்பி அறுந்து கம்பிவேலியில் விழுந்துள்ளது. 



இதை கவனிக்காமல் கம்பியை பிடித்த மூவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். சம்பவம் குறித்து இந்த ஊர் மக்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.



இதைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்குசென்று உடல்களை கைப்பற்றி உதகை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்நிலையில் மூன்று பேரின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 



இதற்கிடையில், நில உரிமையாளர் சந்திரன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என்று அரசு மருத்துவனையில் உறவினர்கள் காத்திருப்பாேராட்டத்தில் ஈடுபட்டனர். 

சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்காெள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் உறுதி அளித்ததன் பேரில் பாேராட்டம் கைவிடப்பட்டது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...