வால்பாறையில் சிறப்பு மருத்துவ முகாம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில், மாவட்ட ஆரம்ப தலையீட்டு மையம் மற்றும் வால்பாறை வட்டார வள மையத்தின் மூலம் பள்ளி சிறார்கள், பழங்குடியினர் மற்றும் பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில், மாவட்ட ஆரம்ப தலையீட்டு மையம் மற்றும் வால்பாறை வட்டார வள மையத்தின் மூலம் பள்ளி சிறார்கள், பழங்குடியினர் மற்றும் பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. 



வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் கண், காது, மூக்கு தொண்டை, இருதயம் சம்பந்தமான பரிசோதனைகள் மற்றும் இ.சி.ஜி ஸ்கேன் பரிசோதனைகள் நடைபெற்றன. 

மருத்துவ ஆலோசணைகளும் மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இந்த மருத்துவ முகாமில் வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் கார்த்திகேயன், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமணை மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.



இந்த மருத்துவ முகாமில் உண்டு உறைவிட பள்ளியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பழங்குடியின மக்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...