சிங்காநல்லூரில் பழுதடைந்த ஹவுசிங் யூனிட்; புதிய வீடுகள் கட்டித்தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 500க்கும் மேற்பட்டோர் கைது

கோவை: சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே பழுதடைந்த மோசமான ஹவுசிங் யூனிட் வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே பழுதடைந்த மோசமான ஹவுசிங் யூனிட் வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க வலியுறுத்தி திமுக சார்பில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே ஹவுசிங் யூனிட் குடியிருப்பு உள்ளது. இங்கு 17.55 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 960 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில் தற்போது மிகவும் பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

அங்கு குடியிருப்பவர்களுக்கு புதிய வீடுகள் கட்டி தரக்கோரி தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஹவுசிங் யூனிட் அருகே திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிங்காநல்லூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய சிங்காநல்லூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் நா.கார்த்திக், குடியிருப்பவர்களுக்கு அதே பகுதியில் வீடுகள் கட்டி தர வேண்டுமென சட்ட மன்றத்தில் பல முறை வலியுறுத்தியும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கார்த்திக் குற்றம்சாட்டினார். மேலும், குடியிருப்பு வாசிகளுக்கு மாற்று இடங்களில் தற்காலிக வீடுகள் ஒதுக்கித் தர வேண்டுமெனவும், சேதமடைந்த வீடுகளை இடித்து விட்டு புதிய வீடுகள் கட்டி தர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...