எந்த அரசியல் கட்சி தலையீடும் இல்லாமல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை கட்டிதர வேண்டும் - நல சங்க உறுப்பினர்கள் ஆட்சியரிடம் மனு

கோவை: எந்த அரசியல் கட்சி தலையீடும் இல்லாமல் சிங்காநல்லூரில் பழுதடைந்ததுள்ள ஹவுசிங் யூனிட் வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டிதர வேண்டும் என நல சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: எந்த அரசியல் கட்சி தலையீடும் இல்லாமல் சிங்காநல்லூரில் பழுதடைந்ததுள்ள ஹவுசிங் யூனிட் வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டிதர வேண்டும் என நல சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே ஹவுசிங் யூனிட் குடியிருப்பு உள்ளது. இங்கு 17.55 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 960 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில் தற்போது மிகவும் பழுதடைந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். ஆனால் 3 ஆண்டுகளுக்கு முன்பு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பேசியபோது, விற்பனை செய்யப்பட்ட வீடுகளுக்கு எதுவும் செய்து தர முடியாது என தெரிவித்தார்.

இந்நிலையில், எந்த அரசியல் கட்சி தலையீடும் இல்லாமல் பழுதடைந்ததுள்ள வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டிதர வேண்டும் என நல சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் பேசுகையில், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கோரிக்கைகளை ஏற்று, வேண்டிய வசதிகளை செய்து தருவதாக அரசு உறுதி அளித்து உள்ளதாகவும் ஆனால், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள ஒரு சிலர் அரசியல் செய்வதாகவும், இங்கு ஏ.பி.சி என மூன்று பிரிவுகளாக உள்ள நிலையில், எந்த அரசியல் கட்சியின் தலையீடு இல்லாமல் புதிய வீடுகள் கட்டிதர வேண்டும் என்றனர்.

மேலும், அப்பகுதி மக்கள் பலனடையும் வகையில் மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர்கள், மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...