நீலகிரியில் டிச., 14ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்‌ செய்யலாம்‌ - மாவட்ட ஆட்சியர்‌ இன்னசென்ட்‌ திவ்யா

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில்‌ 14.12.2019 சனிக்கிழமை அன்று ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்‌ செய்யலாம்‌ என மாவட்ட ஆட்சியர்‌ / மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ இன்னசென்ட்‌ திவ்யா தெரிவித்துள்ளார்‌.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில்‌ 14.12.2019 சனிக்கிழமை அன்று ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்‌ செய்யலாம்‌ என மாவட்ட ஆட்சியர்‌ / மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ இன்னசென்ட்‌ திவ்யா தெரிவித்துள்ளார்‌.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்‌,/ மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌ இன்னசென்ட்‌ திவ்யா அவர்கள்‌ தெரிவித்ததாவது:-

நீலகிரி மாவட்டத்தில்‌ உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 393 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்‌, 35 கிராம ஊராட்சித்‌ தலைவர்‌, 59 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்‌ மற்றும்‌ 6 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்‌ ஆகிய பதவியிடங்களுக்கு முதல்‌ கட்டமாக குன்னூர்‌ மற்றும்‌ கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு 27.12.2019 அன்றும்‌, இரண்டாம்‌ கட்டமாக உதகமண்டலம்‌ மற்றும்‌ கூடலூர்‌ ஊராட்சி ஒன்றியங்களுக்கு 30.12.2019 அன்றும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கண்ட இரண்டு கட்ட தேர்தலுக்கு வேட்புமனுக்கள்‌ 09.12.2019 முதல்‌ 16.12.2019 வரை முற்பகல்‌ 10.00 மணி முதல்‌ 05.00 மணிவரை பெறப்படுகிறது.

இதில்‌ 14.12.2019 சனிக்கிழமை அன்று மாதத்தின்‌ இரண்டாவது சனிக்கிழமை வாரமாக இருப்பதால்‌ அன்றைய தினம்‌ விடுமுறை நாளாக கருதப்பட்டு வேட்பு மனு தாக்கல்‌ செய்ய இயலாது என ஏற்கனவே பத்திரிக்கை செய்தியின்‌ வாயிலாக தெரிவிக்கப்பட்டது. ஆனால்‌, தற்பொழுது தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையத்தின்‌ சுற்றறிக்கையின்படி, 1881-ஆம்‌ ஆண்டு செலாவணி முறிச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ மாதத்தின்‌ இரண்டாவது சனிக்கிழமை (14.12.2019) அன்று விடுமுறை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால்‌ 14.12.2019 சனிக்கிழமை தன்று அனைத்து ஊரக உள்ளாட்சித்‌ தேர்தலுக்கான வேட்புமனுக்கள்‌ தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்கள்‌ மற்றும்‌ உதவி தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்களால்‌ பெறப்படும்‌ என மாவட்ட தேர்தல்‌ அலுவலர்‌/மாவட்ட ஆட்சியர்‌ இன்னசென்ட்‌ திவ்யா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...