நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 14.12.2019 சனிக்கிழமை அன்று ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் / மாவட்ட தேர்தல் அலுவலர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்,/ மாவட்ட தேர்தல் அலுவலர் இன்னசென்ட் திவ்யா அவர்கள் தெரிவித்ததாவது:-
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 393 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 35 கிராம ஊராட்சித் தலைவர், 59 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் 6 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு முதல் கட்டமாக குன்னூர் மற்றும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு 27.12.2019 அன்றும், இரண்டாம் கட்டமாக உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு 30.12.2019 அன்றும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கண்ட இரண்டு கட்ட தேர்தலுக்கு வேட்புமனுக்கள் 09.12.2019 முதல் 16.12.2019 வரை முற்பகல் 10.00 மணி முதல் 05.00 மணிவரை பெறப்படுகிறது.
இதில் 14.12.2019 சனிக்கிழமை அன்று மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை வாரமாக இருப்பதால் அன்றைய தினம் விடுமுறை நாளாக கருதப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்ய இயலாது என ஏற்கனவே பத்திரிக்கை செய்தியின் வாயிலாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்பொழுது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையின்படி, 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச் சட்டத்தின் கீழ் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை (14.12.2019) அன்று விடுமுறை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் 14.12.2019 சனிக்கிழமை தன்று அனைத்து ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பெறப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.