கோவையில் சிறுமிகளுக்கு அதிகரித்து வரும் பாலியல் தொல்லை; 61 வயது முதியவர் உட்பட இருவர் கைது

கோவை: கோவை மாநகர, மாவட்ட காவல் எல்லைப் பகுதிகளில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 61 வயது முதியவர் உட்பட இருவர் மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவை மாநகர, மாவட்ட காவல் எல்லைப் பகுதிகளில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 61 வயது முதியவர் உட்பட இருவர் மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த சில வருடங்களாகவே கோவை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா அறிவுரையின் பேரில், மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின் பேரில் பெண்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் இருவேறு காவல்நிலையங்களில் இரண்டு பேர் மீது போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட மேட்டுப்பாளையம் ஐயப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 61 வயதான ஷேக் பாவா என்பவர் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

அதே போல, கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட தெற்கு உக்கடம் அல் அமீன் காலனியை சேர்ந்தவர் முகமதுவாசிம் (26). இவர் மாநகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவிக்கு காதல் ஆசை காட்டி பழகி வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று பெற்றோர்கள் யாரும் இல்லாத வேளையில் சிறுமியின் வீட்டிற்குச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து எழுந்த புகாரின் பேரில், ஆர்எஸ் புரம் அனைத்து மகளிர் போலீசார் முகமது வாசிம் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...