தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்..! அரசியல் கட்சிகளின் சின்னம், போஸ்டர்கள் அகற்றம்

கோவை: உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் காரணமாக மேட்டுப்பாளையத்தில் அரசு அலுவலங்களில் ஓட்டப்பட்ட கட்சி போஸ்டர்கள் கிழித்து அகற்றப்பட்டு வருகிறது.

கோவை: உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் காரணமாக மேட்டுப்பாளையத்தில் அரசு அலுவலங்களில் ஓட்டப்பட்ட கட்சி போஸ்டர்கள் கிழித்து அகற்றப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 27 மற்றும் 30ம் தேதி நடைபெற உள்ளது. குறிப்பிட்ட ஒன்பது மாவட்டங்களை தவிர மீதமுள்ள 27 மாவட்டங்கள் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சி போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சி பகுதிகளுக்கு 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விதிமுறைகளை மீறி காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒட்டியிருந்த போஸ்டர்களை காரமடை பேரூராட்சி துப்புரவு ஊழியர் போஸ்டர்கள் கிழித்து அப்புறப்படுத்தினர்.

மேலும், அரசு அலுவலங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தை அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் மற்றும் விளம்பரங்கள் சுவர்களில் அனுமதி இல்லாமல் எழுதவோ ஓட்டவோ கூடாது என அறிவிப்பு ஒட்டப்பட்டு வருகிறது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...