கோவை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருநங்கை பாதுகாப்பு திருத்த மசோதாவிற்கு, குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கவோ, கையெப்பம் இட வேண்டாமென்று ஒட்டுமொத்த திருநர்கள் சார்பில் கேட்டுக்கொள்வதாக திருநங்கை அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் ரேவதி தெரிவித்தார்.

கோவையில் பல்வேறு திருநங்கை மற்றும் திருநம்பிகளின் அமைப்புகள் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரேவதி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருநங்கை பாதுகாப்பு சட்டம் திருத்த மசோதா எங்களை 50 வருடம் பின்னுக்கு தள்ளுவது போல் உள்ளதாகவும், இந்த மசோதாவை நாங்கள் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்தார்.
எங்களை சுதந்திரமாக வாழ்வதற்கு, 2014ல் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு எதிராக இந்த மசோதா உள்ளதாகவும், இந்த மசோதாவில் பாலினத்தை உறுதி செய்ய அறுவை சிகிச்சை செய்ய கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது என தெரிவித்த அவர், திருநங்கைகளுக்கு எதிராக செய்யப்படும் தீவிரமான வன்கொடுமைகளுக்கும், தாக்குதல்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இணையான தண்டனை வழங்க வேண்டும். ஆனால், இந்த மசோதாவில் இரண்டு ஆண்டு தண்டனைகள் மட்டுமே உள்ளது என அவர் கூறினர்.

இந்த மசோதாவில் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பற்றி எதுவும் கூறவில்லை, இதுவும் 2014ம் ஆண்டு வழங்கப்பட்ட நால்சா தீர்ப்புக்கு எதிராக உள்ளதாக குற்றம்சாட்டிய அவர்கள், கேரளாவில் வழங்கப்பட்டது போல் திருநர்களுக்கு அடையாள அட்டையானது அவர்களின் சுய விருப்பத்திற்கு ஏற்றது போல் வழங்கப்பட வேண்டும் என்றும் நாடு முழுவதும் எங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முக்கிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை செய்ய ஆவணம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
குறிப்பாக திருத்தங்கள் செய்திருக்கும் இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கவோ, கையெப்பம் இட வேண்டாமென்று ஒட்டுமொத்த திருநர்கள் சார்பில் கேட்டுக்கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.