இளநிலை உதவியாளராக தமிழக வனத்துறையில் தடம் பதித்த திருநங்கை தீப்தி..!

நீலகிரி: தமிழகத்திலேயே முதன் முறையாக நீலகிரி மாவட்ட வனத்துறையில் இளநிலை உதவியாளராக பணியமர்த்தப்பட்ட திருநங்கை தீப்தி இத்துறையில் திறம்பட செயல்படுவேன் என்று தெரிவித்தார்.

நீலகிரி: தமிழகத்திலேயே முதன் முறையாக நீலகிரி மாவட்ட வனத்துறையில் இளநிலை உதவியாளராக பணியமர்த்தப்பட்ட திருநங்கை தீப்தி இத்துறையில் திறம்பட செயல்படுவேன் என்று தெரிவித்தார்.

நீலகிரி மாவட்ட வன அலுவலகத்தில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்துள்ளார். நீலகிரி வனத்துறையில் பணியாற்றி வந்த கோவை பெரியநாயக்கன்பாளையம் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் கடந்த 2007ஆம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார்.

உயிரிழந்த சுப்பிரமணியத்தின் மகன் சுதன் ராஜ் திருநங்கையாக மாறிய பின் தனது பெயரை தீப்தி என மாற்றிக் கொண்டார். பி.காம் படித்த இவர் தனது தந்தையின் வாரிசு வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். 



தற்போது கவுண்டம்பாளையத்தில் வசித்து வரும் இவருக்கு உதகையில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது.



இன்று பணியில் பொறுப்பேற்ற பின் தீப்தி பேசுகையில், என்னைப்போல் சாதிக்க இருக்கும் திருநங்கைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை நிச்சயமாக செய்வேன் என்றும் மேலும் பல துறைகளில் திருநங்கைகள் சாதிக்க வேண்டும் அதற்கு முன்னுதாரணமாக தான் இந்த பணியில் சேர்ந்துள்ளது மிகவும் பெருமையுடன் கருதுவதாக தெரிவித்தார்.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் வனத்துறையில் கிடைத்த இப்பணியை மிக சிறப்பாக செய்து தனக்கு இப்பணியில் சேர மிக ஒத்துழைப்பு தந்த தனது தாயாருக்கும் தோழிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என உணர்வுப்பூர்வமாக தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...