கோவை: டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி கோவை டாடாபாத் உணவு குடோன் பகுதியில் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் கூறியதாவது:-
தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட பெரியார் உணர்வாளர்கள் மற்றும் பல்வேறு விதமான சமூக அமைப்புகள் தொடர்ந்து கோவை மாநகரின் மையப்பகுதியில் டாக்டர் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதை உடனடியாக மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் உடனடியாக முடிவெடுத்து சிலையை நிறுவ உத்தரவு வழங்க வேண்டும் என்றார்.
மேட்டுப்பாளையத்தில் 117 பேர் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாகை. திருவள்ளுவன் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு வந்த முதலமைச்சர் மக்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார். அவர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்த உடனேயே இவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் முடிந்து விடுகிறது. அதனால் உடனடியாக அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.