நீலகிரியில் தேயிலைக்கு உரிய விலையினை வழங்காத தொழிற்சாலைகள்; நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் மனு

நீலகிரி: பச்சை தேயிலைக்கு உரிய விலையினை வழங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென தேயிலை வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி: பச்சை தேயிலைக்கு உரிய விலையினை வழங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென தேயிலை வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



நீலகிரி மாவட்டத்தில் 65க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் தேயிலை தொழிலை நம்பி உள்ளனர். கடந்த மாதம் முழுவதும் பெய்த பலத்த மழை காரணமாக தேயிலை தோட்டங்களில் பச்சை பறிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் பச்சை தேயிலை விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தரத்திலும் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை தொழிற்சாலைகள் வாங்க மறுப்பதுடன் வாங்கிய இலைகளுக்கும் உரிய விலையை கொடுப்பதில்லை என்று கூறி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென தேயிலை வாரிய அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.



இதனையடுத்து மனுவை பெற்றுக்கொண்ட தேயிலை வாரிய செயல் இயக்குனர் பாலாஜி, தொழிற்சாலைகளில் அதிகாரிகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டு பச்சைத் தேயிலைக்கு உரிய விலை கொடுக்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தபின் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...