நீலகிரி: உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் தமிழகத்தின் பங்கான ரூ.3000 கோடியை மத்திய அரசிடமிருந்து வாங்க முடியவில்லை எனவும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அதிமுக வெற்றி பெறாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

உதகையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெரும்பாலான சிங்களர் ஒட்டுக்களால் தான் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார் எனவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிகார பகிர்வு அளித்து இந்திய மாநிலங்கள் போல் உரிமை வழங்கினால் தான் தமிழர்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்றார்.
ராஜீவ் காந்தி செய்து கொடுத்த ஒப்பந்தத்தை மோடியும் கோத்தபயவும் செயல்படுத்த தவறினால் அங்கு பல சிரமங்கள் ஏற்படும் என்றும் மக்களின் பங்களிப்பு இல்லாமல் "ஆள் தூக்கி" உள்ளாட்சி தேர்தல் நடந்தால் பணபலம் அதிகாரம் படைத்தவர்கள் தான் பதவிகளில் அமர்வார்கள், இதை காங்கிரஸ் உட்பட தோழமை கட்சிகள் எதிர்க்கும் என்று தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் தமிழகத்தின் பங்கான 3000 கோடி ரூபாயை மத்திய அரசிடமிருந்து வாங்க முடியவில்லை என்று கூறிய அவர், உள்ளாட்சி தேர்தல் நடந்தால் அதிமுக வெற்றி பெறாது எனவும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானது எனவும் தமிழகத்தில் 75% ஏழை குடும்பங்கள் உள்ளதால் இவர்களுக்கு இது சாத்தியமில்லை என்று கூறினார்.
மேலும், விண்வெளியில் இருக்கும் வெற்றிடத்தை கண்டுபிடிப்பதே கஷ்டம், இதில் ரஜினி எந்த கேமரா மூலம் தமிழகத்தில் வெற்றிடத்தை கண்டுபிடித்தார் என்று கேள்வி எழுப்பிய அவர், வெற்றிடம் என்ற பெயரில் வேண்டுமானால் சினிமா தயாரிக்கலாம் என்றும் ரஜினி, கமல் இணைந்தால் அவர்களுக்கு தான் பாதிப்பு கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தார்.
அதேபோல, பிரதமர் மோடி அரசு திட்டமிட்டே பொதுத்துறை நிறுவனங்களை அழித்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், அமெரிக்க அரசு விளை பொருட்களுக்கு 100% விலை கொடுக்கிறது ஆனால் இங்கு 50% விலை கூட கிடைப்பதில்லை பச்சை தேயிலைக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் என்று கூறினார்.