கோவை: கோவை அடுத்த சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரையடுத்து 4 பேர் மீது போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை: கோவை அடுத்த சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரையடுத்து 4 பேர் மீது போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது உறவினரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 26ம் தேதி சிறுமி அவரின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாட காதலனுடன் அதே பகுதியில் உள்ள ஐஸ்வர்யா கார்டனுக்கு சென்றுள்ளார்.
அப்போது, அந்த கார்டனுக்குள் இருந்த சுமார் 6 பேர் கொண்ட கும்பல் 17 வயது சிறுமியின் காதலரை நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். அத்துடன் அந்த இளைஞரை புகைப்படமும் எடுத்துள்ளனர். பிறகு அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவும் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தரப்பில் கடந்த 28ம் தேதி ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராகுல் (21), பிரகாஷ்(22), கார்த்திகேயன்(28) மற்றும் நாராயண மூர்த்தி(30) ஆகியோரை போலீஸார் கைது செய்து போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், முக்கிய குற்றவாளியான மணிகண்டன் மற்றும் அவரது நண்பரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். அதேசமயம், இந்த சம்பவம் கூட்டு பாலியல் வன்கொடுமை இல்லை என காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.