கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண்.24 சுந்தரம் வீதியில் பொதுமக்கள் தாமாக மக்கும், மக்காத குப்பைகளைப் பிரித்து சுகாதாரப் பணியாளர்களிடம் வழங்குவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மக்கும், மக்காத குப்பைகளை சேகரிக்கும் ஸ்டால்கள் 5 இடங்களை பார்வையிட்டும், சித்திவிநாயகர் வீதியில் TATA ACE வாகனம் மூலம் மக்கும் குப்பைகள் சேகரிக்கும் பணிகள் நடைபெறுவதையும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், தெற்கு மண்டலத்துக்குட்பட்ட வார்டு எண்.79 தடாகம் சாலை, பொன்னையராஜபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தூய்மைப்பணிகளையும், டெங்கு தடுப்பு பணிகளையும் சுகாதாரப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, மேற்கு மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், தெற்கு மண்டல சுகாதார அலுவலர் லோகநாதன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.