கோவை மாநகராட்சி மேற்கு, தெற்கு மண்டலத்தில்‌ சுகாதாரப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையர்‌ நேரில்‌ ஆய்வு

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.24 சுந்தரம்‌ வீதியில்‌ பொதுமக்கள்‌ தாமாக மக்கும்‌, மக்காத குப்பைகளைப் பிரித்து சுகாதாரப்‌ பணியாளர்களிடம்‌ வழங்குவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.24 சுந்தரம்‌ வீதியில்‌ பொதுமக்கள்‌ தாமாக மக்கும்‌, மக்காத குப்பைகளைப் பிரித்து சுகாதாரப்‌ பணியாளர்களிடம்‌ வழங்குவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



மேலும்‌, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மக்கும்‌, மக்காத குப்பைகளை சேகரிக்கும்‌ ஸ்டால்கள்‌ 5 இடங்களை பார்வையிட்டும்‌, சித்திவிநாயகர்‌ வீதியில்‌ TATA ACE வாகனம்‌ மூலம்‌ மக்கும்‌ குப்பைகள்‌ சேகரிக்கும்‌ பணிகள்‌ நடைபெறுவதையும்‌ மாநகராட்சி ஆணையாளர் மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர், தெற்கு மண்டலத்துக்குட்பட்ட வார்டு எண்‌.79 தடாகம்‌ சாலை, பொன்னையராஜபுரம்‌ பகுதியில்‌ உள்ள பொதுமக்களிடம்‌ தூய்மைப்பணிகளையும்‌, டெங்கு தடுப்பு பணிகளையும்‌ சுகாதாரப்‌ பணியாளர்களால்‌ மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ கேட்டறிந்தார்.



இந்த ஆய்வின் போது, மேற்கு மண்டல சுகாதார அலுவலர்‌ குணசேகரன்‌, தெற்கு மண்டல சுகாதார அலுவலர்‌ லோகநாதன்‌ மற்றும்‌ மாநகராட்சி பணியாளர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...