கோவை: மேட்டுப்பாளையம் - கோவை இடையே புதியதாக துவங்கப்பட்டுள்ள மெமோ ரயிலில் போதிய இடவசதி இல்லாததால் கூடுதல் ரயில் பெட்டிகளை இணைக்க ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை மாநாகருக்கு தினசரி ரயில், 11 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. காலை முதல் மாலை வரை நாள் ஒன்றிக்கு எட்டு முறைக்கும் மேல் இயக்கப்படும் இந்த ரயிலை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர், மருத்துவமனைக்கு செல்வோர் மற்றும் இதர தேவைகளுக்காக ஒரு நாளைக்கு 50,000க்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் இந்த ரயில் சேவையை நவீனப்படுத்தும் விதமாக தெற்கு ரயில்வே, கோவை - மேட்டுப்பாளையத்திற்கு மெமோ ரயிலை அறிமுகப்படுத்தியது. அதே கட்டண முறையில், சாதாரண பயணிகள் ரயிலைவிட கண்காணிப்பு கேமரா, கழிப்பறை வசதி, இருபுறமும் இயக்கக் கூடிய எஞ்சின், கூடுதல் வேகம், என பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக இந்த மெமோ ரயில் உள்ளது. இருப்பினும் இதில் பயணிகளுக்கு போதிய இடவசதி இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கு முன்னதாக சாதாரண பயணிகள் ரயிலில் 11 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மெமோ ரயிலில் எட்டு பெட்டிகள் மட்டுமே உள்ளது. இது முன்னர் இருந்ததை விட மூன்று பெட்டிகள் குறைவு என்பதால் நாள் ஒன்றிக்கு 1500 பயணிகள் இதில் பயணிக்கும் வாய்ப்பினை இழக்கின்றனர். மேலும், மெமோ ரயிலில் பெரும்பாலும் நின்று கொண்டே பயணிப்பதுடன் இடம் கிடைக்காமல் வயது முதிர்ந்தவர்கள் நோயாளிகள் என பலரும் ரயில் பயணத்தைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மெமோ ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைத்து பயணிகள் சிரமத்தைப் போக்க வேண்டும் என ரயில் பயணிகள் தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.